வாழ்க்கையில் வலியும் துன்பமும் தொடர்கிறதே? / கேள்வி - பதில்கள்
- ஆனந்தி சுப்ரமணியம், ஸ்ரீரங்கம்.
பொதுவாக வலியும் துன்பமும் நாம் விரும்பாததாக இருப்பினும், அது வருவதைத் தவிர்க்க முடிவதில்லை. பல நேரங்களில் வலிக்கு வலியேகூட மருந்தாகிறது. தேவைப்படுகிறது. உதாரணமாக, வயிற்றில் கட்டி என்றால் துடிக்கிறோம். உடனே மருத்துவர் வயிற்றைக் கத்தியால் கிழிக்கிறார் வலிக்கிறது. அந்த வலி போக, இந்த வலியைப் பொறுத்துக் கொள்ளச் சொல்கிறார். என்ன செய்வது? வலி கஷ்டத்தைத் தந்தாலும், மன வலிமையையும் தரவே செய்கிறது. ஒரு விஷயத்தை Negative ஆக எடுத்துக் கொள்வதால் பயனில்லை, Positive ஆக எடுத்துக் கொள்வதால், சில நேரங்களில் பலனில்லாவிட்டாலும் துக்கம் குறைகிறது.-----------------------------------------------------------------------------------------------------------------------------
தேதி: 28.08.2025
தங்களின் மேலான கருத்துக்கள், கடிதங்கள் மற்றும் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. அனுப்பவேண்டிய மெயில் ஐ.டி: madhvacharyatv2023@gmail.com வாட்சப் எண்ணிலும் அனுப்பலாம்.
வாட்சப் எண்கள்: MADHVACHARYA TAMIL MAGAZINE CONTACT: 6369957027
-----------------------------------------------------------------------------------------------------------------------------
கருத்துகள்
கருத்துரையிடுக